பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே பல விநாடிகள் அசைவற்று நின்றான். மணவறையில் முதல் நாளன்றுகூட மனையாட்டியை உறவு கொள்ள அனுமதிக்காத அரசகுல வாழ்வை அந்தச் சில விநாடிகள் பெரிதும் வெறுத்தான் பராந்தகன். ‘வீண் படாடோபம். அர்த்தமற்ற அதிகாரம். இதுதான் அரச வாழ்வு’ என்று மனத்துக்குள் வெறுத்தவண்ணம் நின்றிருந்த பராந்தகனை, பஞ்சணை முகப்பிலிருந்த மல்லிகைச்சரத் திரையை லேசாக விலக்கித் தலை நீட்டிய வானவன்மகாதேவி, “என்ன விசேஷம்? அரசர் எதற்காக அவசரமாக வந்தார்?” என்று கவலை பாய்ந்த குரலில் வினவினாள்.