இப்போது கூட எழுதுவதைவிடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாக ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி. திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகச் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் ‘ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், ‘ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக் கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடராசப்ப கவிராயரின் ஒரு கவிதை வரி. மொழியழகும், கவிராயரின் மனவுலகும் அதியற்புதமாக ஒன்றி லயப்பட்டிருக்கிற அந்த அனுபவத்தை அனுபவித்துதான் உணரமுடியும்.
Format:
Pages:
44 pages
Publication:
Publisher:
Edition:
Language:
tam
ISBN10:
ISBN13:
kindle Asin:
B0816XBWMZ
மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி - 4 (Tamil Edition)