முன்பின் பார்த்து, பழகியிராத இருவர் திருமணவாழ்வில் இணைகிறார்கள். அவளைக் கண்ட கணத்தில் காதல் கொள்ளும் நாயகனும், நமக்கு எட்டாத ஒன்று என்று எண்ணியிருந்த வாழ்வு அவளைத் தேடிவந்தபோது மறுக்கமுடியாமல் நாயகியும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இரு மனங்கள் கலந்தாலும் திருமணம் என்பது இரு குடும்பங்களின் பிணைவு அல்லவா. அதற்குள் உருவாகும் சின்னச் சின்ன பிணக்குகளோடு நகர்கிறது கதை. கருவும், கதைக்களமும் பழையதுதான் என்றாலும், சொல்லக் சொல்ல சொல்லி முடிக்கப்படாத முடிவிலிதானே காதல். இந்தக் காதலிலும் நீங்கள் அறியாத ஏதோ ஒரு சுவை உங்களைக் கட்டியிலழுக்கும் என்று நம்புகிறேன்.