வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெளியே போட்டா நாய் தூக்கிட்டு போய்டுது சார்… உள்ளே போங்கோ.”
அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிறத் திரைச்சீலை தொங்கிக்கிடப்பதுபோல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான தூளிநாற்காலியில் பெரியவர் அமர்ந்திருந்தார். மடியில் பித்தளை வெற்றிலைச்செல்லத்தை வைத்துக்கொண்டு பாக்குவெட்டியால் கொட்டைப்பாக்கின் தோலைச் சீவிக்கொண்டிருந்தார். மூக்குக் கண்ணாடி கொஞ்சம் நழுவி அமர்ந்திருக்க முகத்தில் விளையாடும் குழந்