செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறாள் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் பெண். ஒரு குத்து மணல் இல்லை ஓடுகிற ஆற்றில். எந்தப் பழத்துக்கும் விதை கிடையாது இப்போதெல்லாம். பார் வசதி உண்டு பார்முழுதும் டாஸ்மாக்கில். எப்படியும் போகிறது ஏறு பை பாஸ் ரைடரில். மரமற்ற நாற்கரச் சாலையில் மதுரை போக இரண்டே மணி நேரம்தான்.