நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவாஇல்லையா என்பது வேறு விஷயம். அவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம் இல்லை. என் கதைகளை அவர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள். அவர்கள் பிரசுரிப்பதால் நான் அவர்களுக்குக்கதைதருகிறேன். நான் அவர்களின் வாழியனோ பங்குதாரனோ அல்ல. இதைப்பற்றி எனக்கொரு கருத்து, விமர்சனம், கண்டனம்கூட உண்டு. அதாவது அவர்களுக்கு நான் எழுதுகிறவன் என்ற முறையில் அல்ல, ஒரு சாதாரண சமூகப் பிரஜை என்கிற முறையில் உண்டு.