'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...' தொடர் வந்த காலங்களில் எனக்கு எத்தனையோ தரிசனங்கள்... 'எங்க ஆபீஸ் லன்ச் ரூம்ல பேசினது உங்களுக்கு எப்படித் தெரியும்?', 'என் பொண்ணு இதேதான் சொல்லுவா', 'என் மருமகளைப் பத்தி சரியா எழுதிட்டீங்க, இன்னும் கூட கொஞ்சம் புத்தி சொல்லியிருக்கலாம்...' என்று ஏகப்பட்ட பெண்கள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தார்கள். அதுமட்டுமல்ல, கட்டுரை எழுத எனக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களே பெண்கள்தானே. மாற்றுத் திறனாளி, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர், சக ஊழியர், பள்ளி/கல்லூரித் தோழியர்... மொத்தத்தில், தெவிட்டாத தரிசனங்கள்தான்! தொடரின் பயணத்தில் நான் அறிந்து கொண்ட விஷயம், 'பெண் என்பவள் பிரமாண்டமானவள்' என்பதைத்தான். காலமே, ஒரு நதி போல அவளின் காலடியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நதியாகவும், அதில் மிதக்கும் சருகாகவும், ஆங்காங்கே துள்ளும் மீனாகவும், அதில் கல்லெறியும் கரையோரத்துச் சுட்டியாகவும்... அனைத்துமாக வியாபித்து நிற்பவள் அவளே. என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது! பாரதி பாஸ்கர்