பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்டான். அவன் இட்ட கட்டளையையும் கேட்டான் அதைத் தொடர்ந்து வேல்களைத் தாங்கித் தன்னை நோக்கி வந்த மற்ற நான்கு மறவர்களையும் பார்த்தான். இத்தனைக்கும் அவன் அச்சத்தையும் காட்டவில்லை. இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, பேச்சுக் கொடுக்கவுமில்லை. ஆனால் கள்ளை குடித்து அரைமயக்கத்திலிருந்த முறைப்பிள்ளை மட்டும் தள்ளாட எழுந்து, வந்தவர்களை நோக்கி, “இவன் ஒற்றனல்ல” என்று உளறினான். இதைக் கேட்டதும் மேட்டில் ஏறி வந்த நால்வரும் பாதி வழியில் நின்றுவிடவே பெரிய மறவன் மட்டும் முன்னால் வந்து,